search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பல்லோ ஆஸ்பத்திரி"

    ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையான ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாயை அ.தி.மு.க. தலைமைக்கழகம் வழங்கியதாக தெரிவித்துள்ளது. #ADMK #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் இருந்து சமீபத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மருத்துவ செலவு மட்டும் ரூ.6.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவமனைக்கான மொத்த செலவு தொகையில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டதாகவும், ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 பாக்கி தொகையாக வழங்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.



    இந்தநிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையான ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாயை காசோலையாக வழங்கியதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா சிகிச்சைக்கான முழு செலவையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அ.தி.மு.க. வழங்கியுள்ளது. #ADMK #JayalalithaaDeath
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தயாளு அம்மாள் மிகவும் துயரத்தில் இருந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து உடனடியாக காரில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும், மு.க.ஸ்டாலினும், அவருடைய குடும்பத்தினரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.

    தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை 4.30 மணிக்கு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.  #DhayaluAmmal #tamilnews 
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்த ஆட்சேபனை இல்லை என்று அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார். #JayaDeathProbe #PrathapReddy #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரை யார்-யார்? வந்து பார்த்தார்கள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையில் அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் தலைவர் பிரதாப் சி.ரெட்டியை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா விசாரணை ஆணையம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது:-



    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எங்கள் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அதன்படி எங்கள் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி வருகின்றனர்.

    ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் ஆணையம் ஆய்வு செய்யலாம். எந்த ஆட்சேபனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathProbe #PrathapReddy #ApolloHospital
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.



    இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #JayalalithaaDeath #ApolloHospital  #tamilnews 
    ×